அட.. சென்னையில் உள்ள இந்த அரசு பள்ளியில் அப்படியென்ன ஸ்பெஷல்.?! சீட் வாங்க.. நீண்ட வரிசையில் பெற்றோர்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் தற்போது மாணவர்களின் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில், சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சீட் வாங்க கடுமையான போட்டி நிலவுகிறது. 

தற்போது அப்பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்கி இருக்கின்ற நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்கள் கூட்டமானது கடுமையான அலை மோதுகிறது. 

சென்னை அசோக் நகரிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தங்கள் மகள்களை சேர்க்க 2 நாட்களாக பெற்றோர்களின் கூட்டமானது அலைமோதி வருகிறது. 

6ம் மற்றும் 11 ஆம் வகுப்புகளில் மாணவிகளை சேர்க்க பெற்றோர் விண்ணப்பங்களை பெற தனியாக டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், இந்த டோக்கன்களை பெற அன்றாடம் நூற்றுக்கணக்கான பெற்றோர் பள்ளியில் நீண்ட வரிசையில் நின்று வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Ashok nagar Govt Girls School getting crowd


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->