செங்கல்பட்டு || வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தகவல்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

"செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும் வருகிற 2023 ஜனவரி 1-ந்தேதியை தகுதியை ஏற்படுத்தும் நாளாக கொண்டு, தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணி நடைபெற்று வருகிறது. அன்றையதினம் 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம்-6 மற்றும் பெயர்நீக்கம் செய்ய படிவம்-7ல் பூர்த்தி செய்யலாம். 

இதையடுத்து, வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்து பிழை மற்றும் முகவரி மாற்றம் மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் ஒரே பாகத்தில் இருந்து மற்றொரு பாகத்திற்கு முகவரி மாற்றி பதிவு செய்ய விரும்புவோர் படிவம்-8 ல் பூர்த்தி செய்து தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடிகளில், வரும் 9-ந்தேதி முதல் படிவம் வழங்கலாம். 

மேலும், வாக்காளர் பட்டியலில் தங்களது ஆதார் எண் இணைத்திட படிவம்-6ல் பூர்த்தி செய்யலாம். இந்த மாதம் 12, 13, 26, 27 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பத்தை நேரில் சென்று வழங்கலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chengalpattu district special camp in new name add votter id


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->