பிரேமலதா விஜயகாந்தை சந்திக்க உள்ள மத்திய மந்திரி: கூட்டணி தொடர்பாகவா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.கவுக்கு எதிராக மூன்றாவது வலுவான அணியை அமைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது. இந்த அணியில் தே.மு.தி.க போன்ற கட்சிகளும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள மத்திய மந்திரி பியூஷ்கோயல் நேற்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நிறைவு செய்துவிட்டு பின்னர் கட்சி நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்கேற்றார். 

இதனைத் தொடர்ந்து மத்திய மந்திரி பியூஷ்கோயல், இன்று சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில் பா.ஜனதா கூட்டணி தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

இன்று மாலை பியூஷ்கோயல், கோயம்பேட்டில் உள்ள கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார். 

பின்னர் சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்து பேச உள்ளார். அப்போது கூட்டணி தொடர்பாகவும் பேச வாய்ப்புள்ளது என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central minister meet premalatha today evening


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->