தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள்., சற்றுமுன் மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக, மத்திய அரசு சற்று முன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 15 நாட்களாக நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிதீவிரமாக பரவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் நாளொன்றுக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இதேபோல் தலைநகர் டெல்லியிலும் கொரோனா நோய் தொற்று சுனாமி போல் பரவி வருகிறது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், தலைநகர் டெல்லி, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், மாநிலத் தலைநகரங்களை பொறுத்தவரை தமிழகத்தின் தலைநகர் சென்னை, மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் நாடு முழுவதும் 28 மாநிலங்களில்ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவி உள்ளதாகவும், இதில் ஒருவர் மட்டுமே இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Say About Omicron And Corona Issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->