கூட்டணி படை சூழ வேட்புமனுத் தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம்! - Seithipunal
Seithipunal



வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மார்ச் 27ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

அதிமுக, திமுக, பாமக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று காலை முதலே வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இதில் தென் சென்னை தொகுதியில் தமிழிசை சௌந்தர்ராஜன், வடசென்னை தொகுதிகள் பால் கனகராஜ் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் தமிழ்நாடு மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மதியம் சுமார் 12 மணி அளவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வினோஜ் பி செல்வம் வேட்புமனு தாக்கலின் போது பாஜகவின் மூத்த நிர்வாகிகளும், கூட்டணி கட்சிகளான பாமக உள்ளிட்ட கட்சிகளின் மூத்த நிர்வாகிகளும் உடன் இருந்தனர். 

28ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 30ஆம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாக இறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Chennai BJP Candidate Vinoj p Selvam nomination 2024


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->