பெரும்பான்மையை நெருங்கும் தவெக; விஜய்யின் வெற்றி; எஸ்.ஏ.சி வீட்டில் கொண்டாட்டம்..!
Celebrations at SACs Residence Over TVK Vijays Victory
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இதுவரை 109 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக சென்னையில் 16 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் 14 தொகுதிகளிலும் 02 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் 109, அதிமுக 75, திமுக 53 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. அதன்படி, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் தமிழ்நாடு முழுவதும் முன்னிலையில் உள்ளனர்.
சென்னையில் 14 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளது.
குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில் திமுக பின்னடைவை சந்தித்துள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் தற்போது முன்னைக்கு வந்துள்ளார். மா.சுப்பிரமணியன் போட்டியிடும் சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
அதேநேரம், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இல்லத்தில் அவரது உறவினர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் திருத்தணி சென்று சாமி தரிசனம் செய்து தியானத்தில் ஈடுபட்டார். தற்போது அவர் வீடு திரும்பிய நிலையில் அவரை வரவேற்று உறவினர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
English Summary
Celebrations at SACs Residence Over TVK Vijays Victory