பல் பிடுங்கிய விவகாரம்.. பல்வீர் சிங் மீது PCR சட்டத்தின் கீழ் வழக்கு..!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல்துறை கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சேரன் மகாதேவி சார் ஆட்சியர் சபீர் ஆலம் முதற்கட்ட விசாரணை நடத்தினார். பிறகு பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் 2 கட்டங்களாக விசாரணை நடத்தினார். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வேதநாராயணன் என்பவர் மற்றும் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஆகியோர் அளித்த புகார்களின் மீது சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முடிவில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மற்றும் சில போலீஸார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாளையங்கோட்டை கே.டி.சி நகரைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் அளித்த புகாரின்பேரில் சிபிசிஐடி போலீஸார் ஏற்கெனவே ஒரு வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், தற்போது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி 7 பேருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case registered under PCR act against Balveer Singh


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->