இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த முகமது ரகுமான், வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று காலை தனது நண்பர் அப்துல்லாவுடன் இருசக்கர வாகனத்தில் புதுப்பேட்டை ஆதித்தனார் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அவர்கள் பின்னால் வந்த மாநகர பேருந்து திடீரென இவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் முகமது ரகுமானின் இடுப்பு பகுதியில் பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவருடைய நண்பர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bus twowheeler accident in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->