கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! அரை நிர்வாணமாக்கி, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய காட்டுமிராண்டி கும்பல்!
brutality that befell woman who tried enter temple gang savages paraded her half naked garlanded sandals and led her procession
மகாராஷ்டிர மாநிலத்தின் உல்லாஸ்நகர் பகுதியில் நிகழ்ந்த மனிதநேயத்தை உலுக்கும் கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உல்லாஸ்நகர் வாக்ரி நகர் பகுதியில் வசித்து வந்த ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு, அங்குள்ள கோவிலுக்குள் நுழையக்கூடாது என உள்ளூர் சாதி பஞ்சாயத்து முன்கூட்டியே தடை விதித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று அந்த கோவிலில் நடைபெற்ற விருந்துநிகழ்ச்சியின் போது, அந்த குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தடையை மீறி கோவிலுக்குள் நுழைந்துள்ளார். இதனால் அங்கு இருந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சிலர் கடும் ஆத்திரமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கம்பிகள் மற்றும் தடிகளுடன் திரண்ட கும்பல், அந்த குடும்பத்தின் வீட்டை முற்றுகையிட்டு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. வீட்டில் இருந்த ஆண்களை தாக்கியதோடு மட்டுமின்றி, பெண்களையும் கடுமையாக தாக்கி, இந்த சம்பவம் குறித்து காவலர்களிடம் புகார் தெரிவித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, வழிமறித்த பெண்கள் அடங்கிய கும்பல் அவரை கொடூரமாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.அந்த பெண்ணின் உடைகளை கிழித்து அரை நிர்வாணப்படுத்தியதுடன், கத்தரிக்கோலால் தலைமுடியையும் வெட்டியுள்ளனர்.
பின்னர் அவரது கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து, சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சாலையில் இழுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.அந்த அவமான ஊர்வலத்தின் போது, வழியிலிருந்த மக்களின் கால்களில் விழுந்து கும்பிடுமாறும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் அங்கு திரண்டிருந்த பலர் சம்பவத்தை தடுக்க முயற்சிக்காமல், செல்போன்களில் வீடியோ பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த கொடூர காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி நாடு முழுவதும் கடும் கண்டனங்களை கிளப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகார் மற்றும் வைரலான வீடியோக்களின் அடிப்படையில், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவலர்கள், இதில் தொடர்புடைய 2 பெண்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
brutality that befell woman who tried enter temple gang savages paraded her half naked garlanded sandals and led her procession