ஸ்விகியில் ஆசையாக உணவு ஆர்டர் செய்தவருக்கு, உணவோடு காத்திருந்த பேரதிர்ச்சி! அதிர்ச்சியில் மூழ்கிய வாடிக்கையாளர்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் வசிப்பவர் பாலமுருகன். இவர் ஸ்விகி ஆப் மூலம் சேலையூரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சிக்கன் சேஸ்வான் நூடுல்ஸ் ஆர்டர் செய்துள்ளார். பின்னர் அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது பாதியில், அந்த உணவில் ரத்தக்கறை படிந்த பேண்டேஜ்  ஒன்று இருப்பதை கண்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் இதுகுறித்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் ஸ்விகி நிறுவனத்திடமும் புகார் அளித்துள்ளார்.

அந்த பதிவில் கூறியதாவது, நான் சிக்கன் சேஸ்வான் நூடுல்ஸை ஸ்விகி ஆப் மூலம் ஆர்டர் செய்தேன். பின்னர் அதை பாதி சாப்பிட்ட பின்பு அதில் ரத்தக்கறை படித்த பேண்டேஜ் இருப்பதை கண்டு அதிர்ந்து அடைந்தேன். பின்னர் உடனடியாக ஆர்டர் செய்த உணவகத்தை தொடர்பு கொண்ட போது, அவர்கள் வேறு உணவு அனுப்புவதாக கூறினார்கள். ஆனால் எனக்கு அதில் திருப்தி இல்லை. மேலும் ஸ்விகியை  தொடர்புகொள்ள முயற்சி செய்த போது அவர்களை நேரடியாக தொடர்புகொள்வதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. மேலும் உணவை பெற்றபிறகு குறுஞ்செய்தி அனுப்புவதற்கான வாய்ப்பு மட்டுமே உள்ளது. ஹோட்டல்களில் கையுறைகள் அணிவது, கைகளில், விரல்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை உணவு தயார் செய்வதற்கு அனுமதிக்காமல் இருப்பது போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

English Summary

blood bant aid mixed with food which ordered in swiggy


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal