தமிழக போலீசாரிடம் உ.பி., பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய விவகாரத்தில், பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா மனுவுக்கு, தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது சம்மந்தமான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞ,ர் பிரசாந்த் உம்ரா மன்னிப்பு கூட கேட்கவில்லை என்று வாதிடப்பட்டது.

அப்போது இந்த விவகாரத்தில் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயாராக இருந்ததாக தெரிவித்தார். 

இதனை அடுத்து உச்சநீதிமன்றம், வருகின்ற திங்கட்கிழமை, காலை 10 மணிக்கு தமிழக காவல்துறை முன்பாக பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ரா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அப்போது நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பை கூற வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், தமிழக காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளை ஒரே வழக்காக விசாரணை செய்ய கோரிய பிரசாந்த் உம்ராவின் மனுவுக்கு  பதில் அளிக்க கோரி தமிழக அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக வழக்கு விசாரணையின்போது, பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவிடம் தினந்தோறும் விசாரணை செய்ய என்ன இருக்கிறது? என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளை தான் நான் எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டேன். தெரியாமல் பதிவு செய்த டிவிட்டுக்கு தமிழகத்தின் பல காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பாஜக நிர்வாகி தெரிவித்தார்.

அப்போது, வழக்கறிஞரான பிரசாந்த் ராவ் உம்ராவ் கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அவருக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Prasanth umra case SC Order


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->