பள்ளியில் சீட் வாங்கி தருவதாக மோசடி.. பாஜக நிர்வாகி நடிகை மதுவந்தி மீது போலீசில் புகார்.! - Seithipunal
Seithipunal


பிஎஸ்பிபி பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி 6 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையிலுள்ள கிருஷ்ண பிரசாத் என்பவர் கோவிலில் நிர்வாகியாக இருக்கிறார். இவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது, பேசிய அவர், மதுவந்தி, கிருஷ்ண பிரசாத்திடம், தான் பிஎஸ்பிபி பள்ளியை நிர்வகித்து வருகிறேன் என்றும் பள்ளியில் சேர 3 லட்சம் கொடுத்தால் சீட்டு வாங்கி தருவதாக மதுவந்தி கூறியுள்ளார்.

இதையடுத்து மார்ச் மாதம் கோவிலுக்கு வரக்கூடிய 8 நபர்கள் பள்ளி சீட்டு கேட்டு கிருஷ்ண பிரசாத்திடம் கொடுத்த 19 லட்சத்தை மதுவந்தியிடம் அவர் கொடுத்துள்ளார். 

அதன்பிறகு, பள்ளியில் சீட்டு கிடைக்காததால் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் மதுவந்தி 13லட்சத்தை திருப்பி கொடுத்து விட்டார். மீதி 6 லட்சம் குறித்து மதுவந்தியிடம் கேட்டப்போது அடியாட்கள் வைத்து தாக்கியுள்ளார். இதனால் மீதி பணத்தை மீட்டு கேட்டு காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம் என அவர் கூறியுள்ளார். இதற்கு கிருஷ்ண பிரசாத் அளித்த புகார் முற்றிலும் பொய் என மதுவந்தி மறுப்பு தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP executive actress Madhuvanthi complains to police


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->