பாஜகவினர் இடையே கோஸ்டி மோதல்.. கலவரமான தேர்தல் களம்.!! ஆம்பூரில் பரபரப்பு - Seithipunal
Seithipunal


ஆம்பூரில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு பாஜகவின் இரு தரப்புக்கு இடையே கை கலப்பு ஏற்பட்டு போலீசார் முன்னிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் ஏற்பட்ட வாக்குவாதம் தேர்தல் முடிந்த பிறகு கைகலப்பாக மாறியுள்ளது. 

வாக்குப்பதிவு முடிந்து வெளியே வந்த பாஜகவின் இரு தரப்பினரும் போலீசார் முன்னிலையில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயற்சித்த போதும் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் ஒரு தரப்பினரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இருந்த முன் விரோதம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP cadres gang war in ambur thirupattur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->