காங்கிரஸ் ஊமை பூதங்கள்.. அடேய் லூசு தம்பி... குஷ்பூ காட்டம்.! - Seithipunal
Seithipunal


நடிகை குஷ்பூ சமூக வலைத்தளத்தில் எந்த நேரமும் ஆக்டிவாக இருந்து வருபவர். தனது அரசியல் விமர்சனமும், திரைத்துறை பயணமும் என ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பாக இருந்து வருவார். காங்கிரஸ் கட்சியில் இருக்கையில், எந்த நேரமும் ஆளும் கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்துகொண்டு இருந்தார். 

பின்னர் பாஜகவில் இணைந்த நிலையில், எதிர்கட்சிகளை சரமாரியாக வறுத்தெடுத்து வருகிறார். இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் வாலிபர் ஒருவர், " காங்கிரசில் இருக்கும் போது தேர்தல் பிரச்சாரத்துக்கு காசு கேட்ட மாதிரி, பிஜேபியிலும் வேல் யாத்திரைக்கு காசு கேட்டிங்களாமே உண்மையா?. முருகனும் மத்த சீனியர்களும் உங்க மேல செம்ம காண்டுல இருக்காங்களாமே. அடுத்த கட்சி ஆபிஸ் போக பெட்டியை ரெடி பண்ணிட்டிங்களா? " என கேள்வி எழுப்பியிருந்தார். 

இதனைக்கண்டு கொந்தளித்துப்போன குஷ்பூ, " அடேய் லூசு தம்பி, ராகுல் காந்தியிடம் இது குறித்து கேட்டுப்பார். தேர்தல் 6 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறுகிறது. எல்லோரும் உன்னைப்போல இருப்பார்களா?.. காங்கிரசில் உள்ள பூதங்களும் ஊமை என்று நிரூபணம் செய்ய வேண்டாம் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Actress Kushboo Twit Fight with Congress party member


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal