அருமையான சுவையில் இனி வீட்டிலேயே செய்யலாம்… வீட்டில் திரும்ப திரும்ப செய்ய சொல்லி கேட்பாங்க..! - Seithipunal
Seithipunal


கேக் என்றாலே குழந்தைகளிருந்து பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும். அந்த வகையில் ஆரோக்கியமான வாழைப்பழ கேக் எளிமையாக வீட்டிலேயே எப்படி செய்வது என்று பாக்கலாம்

வாழைப்பழ  கேக்

தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு                    1 கப்
சர;க்கரை                               1/2 கப்
வாழைப்பழம்                        1
பேக்கிங் சோடா                   1/2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர்                    1 தேக்கரண்டி
எண்ணெய்                            1/2 கப்
வெண்ணிலா                         2 தேக்கரண்டி
சூரியகாந்தி விதைகள்         1 தேக்கரண்டி (விரும்பினால்)
முந்திரி                                   1/2 கப்

 
செய்முறை :

முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி நன்றாக மசித்து வைக்கவும்.

கோதுமை மாவை ஒரு சல்லடையில் எடுத்து சலிக்கவும். பின் அவற்றுடன் சமையல் சோடா, மற்றும் சிறிது பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து வைக்கவும்.

ஒரு கிண்ணத்தில் எண்ணெய் எடுத்து சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.

மசித்து வைத்துள்ள வாழைப்பழங்களை அவற்றில் சேர்த்து கலக்கவும். பின் கோதுமை மாவு கலவையை சேர்க்கவும், அதனுடன் முந்திரி மற்றும் சூரியகாந்தி விதைகள் சேர்த்து நன்கு கலக்கவும்.

 

ஒரு கேக் பான்னில் எண்ணெய் தடவி அதில் இந்த கலவையை ஊற்றி 30 நிமிடங்கள் பேக் செய்யவும். சுவையான கோதுமைவில் வாழைப்பழ கேக் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Banana cake recipe in tamil


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal