குட்கா, பான் மசாலா மீதான தடை நீடிக்கிறது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு தடை விதித்து கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு குட்கா பொருட்கள் மீதான தடையை ரத்து செய்வதாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்த வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்த பொழுது தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மக்களை பாதுகாக்கவே புகையிலை பொருட்கள் தடை விதிக்கப்பட்டது.

புகையிலைப் பொருட்களால் மனிதர்களுக்கு புற்றுநோய் போன்றவை ஏற்படுவதால் குட்கா, பான்பராக் போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கும் போது ஆண்டுதோறும் அறிவிப்பானை வெளியிட்டு பின்னர் அது மாற்றியமைக்கப்பட்டு வருவதாக தனது வாதத்தை முன் வைத்தார்

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்துடன், குட்கா பொருட்களுக்கு தடை விதித்து புதிய அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிரொலியாக தமிழ்நாட்டில் குட்கா பான் மசாலா மீதான தடை தொடர்வதால் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ban on gutka pan masala continues in tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->