திருச்சியில் 6 நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை.! - Seithipunal
Seithipunal


பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 2-ந்தேதி காலை 10 மணிக்கு விமானம் மூலம்  திருச்சிக்கு வருகிறார். 

இதைத் தொடர்ந்து அவர் பகல் 1.05 மணிக்கு லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி திருச்சி மாநகர எல்லைக்குள் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்ததாவது:- "திருச்சி மாநகர எல்லைக்குள் வருகிற 2-ந்தேதி வரை 6 நாட்களுக்கு டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதித்துள்ளார். 

இந்த உத்தரவை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ban drone fly in trichy next six days


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->