#கரூர் || செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு.. அதிகாரிகளை தாக்கிய 4 பேரில் ஜாமின் ரத்து.!! - Seithipunal
Seithipunal


மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் அசோக் குமார் வீடு மற்றும் அவர்கள் தொடர்பு இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள முற்பட்டனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டின் முன்பு குவிந்த கரூர் மாநகராட்சி திமுக மேயர் தலைமையிலான திமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுகவினர் வருமானவரித்துறை அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுத்ததோடு, அவர்கள் பயணித்த கார் மற்றும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்

அதனைத் தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கியது மற்றும் ஆவணங்களை பறித்து சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் திமுக நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோரை கரூர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 4 பேரின் ஜாமீன் மனுவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 4 பேரின் ஜாமின் மனுவை எதிர்த்து வருமானவரித்துறை தாக்கல் செய்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bail canceled for four in Karur attack on income tax officials


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->