அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மதுரை உட்பட 10 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அனுமதி வழங்கி உள்ளது. 

ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை வடநாடு, ஜல்லிக்கட்டு, எருது விடும் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 25 இடங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 13 இடங்களிலும், சிவகங்கையில் 1 இடங்களிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இடங்களிலும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக 6 மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று காலை 8 மணியளவில் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டு களித்தார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 780 காளைகள், 430 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை வீரர்கள் அடக்கினர். மொத்தம் 50 பேர் காயமடைந்தனர்.

மொத்தம் 520 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தனியார் வங்கி ஊழியர் ஒருவர் 26 காளைகளை பிடித்து சாதனை படைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

avaniyapuram jallikattu finish


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal