பயணிகள் கவனத்திற்கு! சொரனூர்-கோவை ரெயில்கள் இன்று ரத்து...! - நாளை சில ரெயில்கள் நேர மாற்றம்...! - Seithipunal
Seithipunal


பாலக்காடு - சொரனூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், பயணிகள் சேவையில் தற்காலிக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை சீராக மேற்கொள்ளும் நோக்கில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) சில முக்கிய ரெயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, சொரனூரில் இருந்து இன்று காலை 8.20 மணிக்கு புறப்படவிருந்த சொரனூர்–கோவை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 56604) ரெயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், கோவையில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்படவிருந்த கோவை-சொரனூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 56603) ரெயிலும் இன்று இயக்கப்படவில்லை.இதனுடன், திருப்பத்தூர்-சேலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தொட்டம்பட்டி நிலையத்தில் நடைபெற்று வரும் தண்டவாள பராமரிப்பு பணிகளின் காரணமாக, சில நீண்ட தூர ரெயில்களின் இயக்கத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, எர்ணாகுளத்தில் இருந்து நாளை (திங்கட்கிழமை) புறப்படும் எர்ணாகுளம்–டாடாநகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 18190) மொரப்பூர் ரெயில் நிலையத்தில் 1 மணி நேரம் நிறுத்தப்படும்.

மேலும், ஆலப்புழாவில் இருந்து புறப்படும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 13352) மொரப்பூர் நிலையத்தில் 30 நிமிடங்கள் நிறுத்தம் பெறும்.இந்த மாற்றங்கள் குறித்து ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி, பராமரிப்பு பணிகள் முடியும் வரை பயணிகள் முன்கூட்டியே தங்கள் பயண திட்டங்களை சரிசெய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Attention passengers Soranur Coimbatore trains cancelled today Some trains their timings changed tomorrow


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->