புதுச்சேரியில் ஆயுதங்களுடன் பதுங்கிய கும்பல் வசமாக சிக்கியது...! - 11 பேர் கைது, 2 பேர் தப்பியோட்டம் - Seithipunal
Seithipunal


புதுச்சேரி கோரிமேடு காவலர்கள் நேற்று இரவு ரோந்து பணியில் இருந்தபோது, தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான காவலர்கள் அங்கு விரைந்து சென்றனர்.அப்போது காவலர்களைப் பார்த்ததும் அந்த கும்பல் தப்பிச் செல்ல முயன்றது. ஆனால் விரட்டி பிடித்த காவலர்கள் 11 பேரை கைது செய்தனர்.

அதில் 2 பேர் தப்பியோடினர். மேலும், பிடிபட்டவர்களிடம் சோதனை நடத்தியபோது ஒரு நாட்டு வெடிகுண்டு, 3 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த விசாரணையில், அவர்கள் அந்த வழியாக செல்லும் வாகனங்களை வழிமறித்து பணம் மற்றும் நகைகளை பறிக்க திட்டமிட்டு பதுங்கி இருந்தது தெரியவந்தது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் முத்தியால்பேட்டையை சேர்ந்த எலி கார்த்தி என்ற கார்த்திகேயன் உள்ளிட்டோர் அடங்குவர்.இதுதொடர்பாக வெடிகுண்டு தயாரித்தல், ஆயுதச் சட்டம், வழிப்பறி முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து 11 பேரையும் கைது செய்தனர்.

அதன் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.மேலும், கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் மீது கொலை மற்றும் வெடிகுண்டு வழக்குகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக  காவலர்கள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Armed Gang Hiding Puducherry Nabbed 11 Arrested 2 Escaped


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->