வி.கைகாட்டி: காவல் அதிகாரி போல உடையணிந்த வாலிபர்.. விசாரணையில் சோக தகவல் அம்பலம்.! - Seithipunal
Seithipunal


அரியலூர் பகுதியில் காவல் துறையினரின் சீருடை அணிந்து நடமாடி வந்த இளைஞரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

வீ.கைகாட்டி பகுதியில் காக்கி சட்டையை அணிந்துகொண்டு இளைஞர் சரக்கு வாகனத்தை வாடகைக்கு பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதனை கண்ட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த காவல் அதிகாரிகள் சந்தேகம் அடைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இளைஞர் அணிந்திருந்த காக்கி சீருடையில் ஆந்திர காவல்துறை போல சிவப்பு கயிறு இருந்துள்ளது. இதனால் தான் பார்த்தவுடன் சந்தேகம் தோன்றியுள்ளது. 

அவரிடம் விசாரித்ததில் பெயர் பாலமுருகன் என்பதும், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தனது தந்தை வைத்திருந்த பணத்தை கொண்டு காவல் அதிகாரி சீருடை, புதிய மோட்டார் சைக்கிள் மற்றும் ஊசி போடுகின்ற சிரஞ்சி ஆகியவை வாங்கி வைத்திருப்பதை காவல்துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

மேலும், அவர் காவல் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற ஆசையில் இருந்த வந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாலமுருகனின் பெற்றோரை வரவழைத்து, மகனை எச்சரிக்கையுடன் பார்க்குமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur man Mentally affected police Dress Roaming


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal