அரியலூர்: கடுகூர் அருகே சோகம்.. நாடகக்காதல் தொல்லை.. வீடு புகுந்து தாக்குதல்..! சிறுமி விஷம் குடித்து மரணம்.!!
Ariyalur Kadugur Village Girl Aged 17 Love Torture by Youngster VelMurugan Girl Finally Suicide Died
நாடகக்காதல் தொல்லை கொடுத்தவன் வீடு புகுந்து சிறுமி, சிறுமியின் தந்தையை தாக்கவே, மன உளைச்சலில் சிறுமி தற்கொலை செய்துகொண்டார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கடுகூர் கிராமத்தை சார்ந்த கூலித்தொழிலியின் 17 வயது மகள், அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு அப்பகுதியை சார்ந்த வேல்முருகன் என்ற காமுகன், நாடகக்காதல் தொல்லை அளித்து வந்துள்ளான்.
மேலும், மாணவி பள்ளிக்கு செல்லும் வழியில் அவரை இடைமறித்து, காதலிக்க கூறி வற்புறுத்தி வந்துள்ளான். இவனது செயல்பாடுகள் நாளடைவில் பெரும் தொல்லையை அளித்ததால், மாணவி பெற்றோரிடம் விஷயத்தை தெரியப்படுத்தி இருக்கிறார்.
இதனையடுத்து, சிறுமியின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் புகாரை பெற்று நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். இந்த தகவலை அறிந்த கொடூரன் வேல்முருகன், மாணவியின் வீட்டிற்கே சென்று அவரை தாக்கி இருக்கிறான். மேலும், சிறுமியின் தந்தையையும் தாக்கியுள்ளான்.

இதனால் பெரும் மன வேதனைக்கு உள்ளாகிய சிறுமி, வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், எங்களின் பெண்பிள்ளை உயிரிழந்திருக்காது என கூறி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சிறுமியின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Ariyalur Kadugur Village Girl Aged 17 Love Torture by Youngster VelMurugan Girl Finally Suicide Died