ஸ்டாலினுக்கு ஆங்கிலமும் தெரியாது, ஹிந்தியும் தெரியாது - அண்ணாமலை பதிலடி! - Seithipunal
Seithipunal



அனைவரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஹிந்தியை ஏற்கின்ற காலம் வரும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த கருத்துக்கு, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மத்திய, மாநில அலுவல் மொழிகள் குறித்த 38 வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தான் மத்திய உள்துறை அமைச்சர் இந்த கருத்தினை தெரிவித்து இருந்தார்.

அமித் ஷாவின் இந்த கருத்துக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.

இது குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவிக்கையில். முதல்வர் ஸ்டாலினுக்கு ஆங்கிலமும். ஹிந்தியும் தெரியாது.

அதனால் மத்திய அமைச்சர் அமித்ஷா என்ன சொன்னார் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியாது.

மத்திய அமைச்சர் அமித்ஷா அனைவரும் தாய் மொழியில் கல்வியை கற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் திமுக இன்னும் அரசியல் செய்து கொண்டு தான் இருக்கிறது. 

குறிப்பாக ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் தமிழக மக்களிடம் பேசுவதற்கு வேற விஷயங்கள் எதுவும் இல்லை. அதனால் தான் இதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். வரும் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் என்பது மட்டும் உறுதி .

மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது உலக சுற்றுப்பயணத்தின் போது தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்று வருகிறார். பிரான்சில் திருவள்ளுவர் சிலையை நிறுவப் போகிறார்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai reply to MKStalin and Udhayanidhi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->