காவேரி- கோதாவரி நதிகள் இணைப்பு தொடர்பில் அன்புமணி காட்டிய அதிரடி - புள்ளி விவரங்களுடன் அனல் கிளப்பிய பேச்சு..! - Seithipunal
Seithipunal


காவேரி- கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தாரீர் என்று வாக்காளப் பெருமக்களுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், தமிழகத்துக்கு தேவையான முக்கிய திட்டங்களுள் ஒன்றாக கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் உள்ளது.

கோதாவரி ஆற்றிலிருந்து ஆண்டுக்கு 1500 டிஎம்சி தண்ணீர் கடலில் கலக்கிறது.மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ரூ.60,000 கோடி செலவில் கோதாவரி தண்ணீரை தமிழகத்துக்கு கொண்டுவருவோம் என நிதின்கட்காரி கூறியிருக்கிறார்.

https://img.seithipunal.com/large/large_anbumani-angry-36488.JPG

வீணாக கடலில் கலக்கும் நீரில் 1000 டி.எம்.சி நீரை ஆந்திரா, தெலுங்கானா, தமிழகத்திற்கு பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.

இதன் மூலம் தமிழகத்திற்கு 200 டிஎம்சி நீர் கிடைக்கும். ஆனால் கர்நாடகாவிடம் இருந்து 177 டிஎம்சி தான் பெற முடிகிறது.

அந்த வகையில் கோதாவரி-காவேரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தில் 25 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறும்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து இந்த கோரிக்கையை விரைவில் செயல்படுத்துவோம். எனவே இதனை நிறைவேற்றித்தர அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anbumani speech about river linking project


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->