கிணற்றில் மிதந்த ஆண் பிணம்!! விவரம் அறிந்த குடும்பத்தினருக்கு ஏற்பட்ட பெரும் துயரம்!!  - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சென்றநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த என்பவர் நாகராஜ்சிங் என்பவருக்கு சொந்தமாக விவசாய கிணறு ஒன்று இருந்துள்ளது. இந்த கிணற்றில் அதே கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு சென்று வந்த பின்னர் குளிப்பதற்காக சென்றதாக தெரிகிறது.

குளிக்கச் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், அவரது குடும்பத்தினர் பல இடங்களில் அவரை தேடியுள்ளனர். மேலும், அவர் கிணற்றிலும் இல்லாததால் வெவ்வேறு இடங்களில் ஒவ்வொருவராக தேட ஆரம்பித்தனர்.

இந்நிலையில், நேற்று காலை கிணற்றில் அவரது சடலம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்தனர். பின்னர் போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் தகவலறிந்து வந்து அவரது உடலை மீட்டனர்.

பின்னர், அங்கு விரைந்த காவல் துறையினர் முருகனின் மரணம் எதிர்பாராத விபத்தா? அல்லது கொலையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

English Summary

An accident in pochampalli


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal