கன்னியாகுமரியில் களமிறங்கிய அமமுக.! வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்தை இணைக்கப் போராடிய மார்ஷல் நேசமணி அவர்களின் 125வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாகர்கோவில், அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதுகுறித்து அமமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், " எல்லைப் போராட்ட தியாகி’, ‘குமரித்தந்தை’ மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்தநாளையொட்டி கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது!

தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்தை இணைக்கப் போராடிய எல்லைப்போராட்ட தியாகியும், குமரித் தந்தை என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுபவருமான மார்ஷல் நேசமணி அவர்களின் 125வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி நாகர்கோவில், அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.கே.டி.பச்சைமால் அவர்கள், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.டி.ஜெங்கின்ஸ் அவர்கள், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு. இ. லெட்சுமணன் அவர்கள், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் திரு.நாஞ்சில் ஏ.முருகேசன் அவர்கள், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் திரு. பி.ஹிமார் பாதுஷா அவர்கள் உள்ளிட்ட திரளான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு குமரித்தந்தை மார்ஷல் நேசமணியின் நினைவைப் போற்றினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ammk respect to kumari thandhai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->