கோவை குண்டுவெடிப்பு || அல்-உம்மா தலைவர் பாலாவுக்கு இடைக்கால ஜாமீன்!!
Al-Ummah leader Basha released Interim Bail in coimbatore bonmb blast case
கோவை மாவட்டதில் கடந்த 1998ம் ஆண்டு குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அல் உம்மா தலைவர் பாஷாவை முன்கூட்டியே விடுவிக்க கோரி அவருடைய மகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் "கடந்த 29 ஆண்டுகளுக்கு மேலாக எனது தந்தை சிறையில் உள்ளார். குண்டு வெடிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட குறைந்தபட்ச தண்டனையை எனது தந்தை அனுபவித்துவிட்டார். தற்போது ஆயுள் தண்டனையை மட்டுமே அனுபவித்து வருகிறார்.

எனவே எனது தந்தையை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கில் நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை எனது தந்தைக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்" என அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் அஜரானார்.அப்போது இடைக்கால ஜாமீன் வழங்குவதில் அரசுக்கு ஆட்சேபனை இல்லை என கூறியதால் பாஷாவுக்கு மூன்று மாதங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதோடு இந்த வழக்கு குறித்து அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.
English Summary
Al-Ummah leader Basha released Interim Bail in coimbatore bonmb blast case