பூந்தமல்லி அருகே, திமுக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து அதிமுகவினர் சாலைமறியல் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


திமுக ஊராட்சி மன்ற தலைவர் வெற்றியை எதிர்த்து, அதிமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் விடுபட்ட தமிழகத்தின் 9 மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள இடைத்தேர்தல் அக். 6 & 9 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்து, அக். 12 ஆம் தேதியான இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி, கொசவன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவருக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பரமகுரு கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, இடைத்தேர்தல் நடைபெற்றது. 

இந்த தேர்தலின் முடிவில் திமுக ஆதரவு வேட்பாளர் அண்ணா குமார் வெற்றி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுகவினர், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி திடீரென சாலையில் மறியலில் ஈடுபட்டு வீதியில் நடக்க தொடங்கினர். 

இதுகுறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அதிகாரிகள் தரப்பில் இருந்து மறுவாக்கு எண்ணிக்கைக்கு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் மீண்டும் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவே, காவல் துறையினர் அதிமுகவினரை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கின்றனர். இதனால் அப்பகுதியில் லேசான பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Supporters Protest Thiruvallur Poonamallee Against DMK Candidate Victory


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->