பெங்களூருவில் கையெழுத்தான ஒப்பந்தம்…! ஆனால் லாபம் தமிழ்நாட்டுக்கு...! -10,000 வேலைவாய்ப்புகள் உறுதி
Agreement signed Bengaluru But profit goes Tamil Nadu 10000 jobs guaranteed
தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் புகழ்பெற்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது,“உலகளாவிய திறன் மையங்களை உருவாக்க முன்னணி இடத்தை வகிக்கும் @ANSRGlobal நிறுவனத்துடன், தமிழக அரசின் @Guidance_TN இன்று ஒரு முக்கியமான மூலோபாய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த கூட்டாண்மை மூலம், தமிழகத்தில் 10,000 உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.பெங்களூருவில் நடந்த உலகளாவிய திறன் மைய தலைவர்களின் வட்டமேசை கலந்துரையாடலின் போதே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அவ்விழாவில் கலந்து கொண்ட முன்னணி நிறுவனங்களின் தலைவர்களில் பலர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதும், குறிப்பாக பெண்களின் பங்களிப்பு பெருமையை ஏற்படுத்தியது என அவர் கூறினார்.
200-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்களை உருவாக்க உதவிய ANSR நிறுவனம், தமிழ்நாட்டுடன் கைகோர்த்திருப்பது தமிழகத்தின் தொலைநோக்கு ஆக்கபூர்வத் திட்டங்களின் வலிமையையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உருவான நம்பிக்கையும் வளர்ச்சியும் பிரதிபலிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
“உலகில் மிகத் துடிப்பான, முன்னேற்றம் நோக்கிய உலகளாவிய திறன் மையங்கள் திகழும் தலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற எங்கள் கனவு துவக்க நிலையில் இல்லை,அது ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. தொழில்நுட்பம், வாகன உற்பத்தி, BFSI, பொறியியல், விண்வெளி மற்றும் சில்லறை வணிக துறைகள் அனைத்தும் தமிழகத்தை தெரிவு செய்கின்றன.
திறமை, உள்கட்டமைப்பு மற்றும் கொள்கை தொடர்ச்சியே அவர்களை இங்கு இட்டுச் செல்கிறது.நிறுவனங்களின் வேலைப்பாடுகளை மறுவடிவமைக்கும் உலகளாவிய திறன் மையங்கள்–உலகில் தொழில் துறையை மாற்றும் சக்தியாக இருப்பினும், இந்தியாவின் அந்த துறையை முழுமையாக மறுவடிவமைப்பது தமிழ்நாடு என்பதில் எந்த ஐயமும் இல்லை” என அமைச்சர் பெருமையுடன் தெரிவித்தார்.
English Summary
Agreement signed Bengaluru But profit goes Tamil Nadu 10000 jobs guaranteed