தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால்... முதல் வாக்குறுதியை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியமைக்கும் போது, திமுகவால் முடக்கப்பட்ட தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மீண்டும் அமலுக்கு வரும் என்று, அதிமுகவின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, நேற்று நாச்சியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதிமுக கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "தேர்தல் நேரத்தில் திமுக அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

ஆனால் தற்பொழுது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இந்த உரிமை தொகையை வழங்குவதாக திமுக அறிவித்துள்ளது.

மேலும், திமுக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளதால், ஏழை எளிய குடும்பத் தலைவிகள் கூட இந்த உரிமை தொகையை பெற முடியாத சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தை பொருத்தவரை திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.

மேலும், திமுக தனது தேர்தல் அறிக்கையில் கட்டுமான பொருட்கள் அனைத்தும் அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதி இன்று காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.

தொழிலதிபர்களுடன் கைகோர்த்துக்கொண்டு விலைவாசி உயர்வை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளது இந்த திமுக அரசு.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு திருமண உதவித்தொகை, மடிக்கணினி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இந்த திமுக அரசு முடக்கி உள்ளது.

மீண்டும் அதிமுக ஆட்சிக்கட்டிலில் அமரும்போது இத்திட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்படும்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Edappadi Palanisami Say About Next ADMK Govt in TN


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->