தமிழகத்தின் நிலை... சீரழிந்த இளைஞர்களின் வாழ்க்கை: கொந்தளிக்கும் இபிஎஸ்.!  - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க சார்பில் தமிழ்நாடு முழுவதும், போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய தி.மு.க அரசை கண்டித்தும் அவற்றை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் அனைத்து மாவட்ட, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. 

சென்னை ஆர்.ஏ. புரத்தில் நடைபெறும் இந்த போராட்டத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் பங்கேற்றார். மேலும் இந்த போராட்டத்தில் கருப்பு பேட்ச் அணிந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

போராட்டத்தை தொடர்ந்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது,

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. தமிழகம் போதைப்பொருள் விற்பனை மையமாக மாறியுள்ளது. 

போதைப்பொருளால் தமிழ்நாடு இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது. ஜாபர் சாதிக்கிற்கு பல்வேறு தரப்பிலும் தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK behalf human chain protest


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->