#Breaking: என் உயிருக்கு யார் பொறுப்பு?.. என்னை எல்லோரும் ஏமாற்றிவிட்டனர்.. விஜயலட்சுமி கண்ணீர் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


நடிகை விஜயலட்சுமி தற்கொலை செய்துகொண்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மரண வாக்குமூலத்தில், சீமான் மற்றும் ரவுடி ஹரி போன்றோரின் மீது புகார் அளித்திருந்தார். 

இந்த நிலையில், சிகிச்சையில் இருக்கும் நடிகை விஜயலட்சுமியை மருத்துவமனை நிர்வாகம் வலுக்கட்டாயமாக, சிகிச்சை முடிந்துவிட்டதாக கூறி மருத்துவமனையை விட்டு வெளியேற்றியுள்ளது. இந்த விஷயத்தின் பின்னணியில் பல மிரட்டல்கள் நடைபெற்றுள்ளதாக பரப்பரப்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகை விஜயலட்சுமி செய்தியாளர்கள் சந்திப்பில், " சீமான் பல துரோகங்கள் செய்துள்ளார்.பெண்ணை விபசாரி என்று கூறினால் உங்களின் மனநிலை எப்படி இருக்கும். எனக்கு சிகிச்சை அளித்துமருத்துவமனையில் இருந்து அனுப்பவே குறியாக இருக்கின்றனர்.

எல்லோரும் என்னை எதோ செய்கின்றனர்.அவசரப்பட்டு என்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றுகின்றனர். மக்கள் மற்றும் ஊடகத்திற்கு அனைத்தும் தெரிந்தாகவேண்டும். நான் உங்கள் முன்னிலையில் உண்ணாவிரதம் இருக்க போகிறேன். மருத்துவமனையில் சிகிச்சை கூட எடுக்க மறுப்பு தெரிவிக்கின்றனர்.

ஊடகத்தால் தான் தான் இன்று நான் உயிர் பிழைத்துள்ளேன். சீமான் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது காரணம் என்ன?. என்னுடன் மக்கள் மற்றும் ஊடகம் இருக்கின்றனர். நடப்பதை பாருங்கள் மக்களே புரிந்துகொள்ளுங்கள்.

இந்த பிரச்சனையை அரசு முதற்கொண்டு அமைதியாக முடிக்க வழிவகை செய்கிறது. என்னை வேண்டும் என்றே சிகிச்சை கூட எடுக்க விடாமல் செய்து இருக்கின்றனர். சீமான் பாஜகவின் கைக்கூலி என்று என்னை கூறுகிறார். ஆனால் மருத்துவமனையில் முழு சிகிச்சை கூட எடுக்க விடாமல் அனுப்பி வைக்கின்றனர். நான் சாப்பிட்டே இரண்டு நாட்கள் ஆகிறது. 

அப்படியே போராட்டத்தை துவங்குட்டேன். மக்களிடம் விஷயத்தை தெரியப்படுத்தும் விதமாக உங்களிடம் நான் கூறுகிறேன். எனது உயிருக்கு யார் பொறுப்பு?, எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நான் இங்கேயே கூட உண்ணாவிரதம் இருக்கிறேன். எனக்கு சிகிச்சை கூட அளிக்க விடாமல் வீட்டிற்கு அனுப்பும் அவசரம் மருத்துவமனை நிர்வாகம் ஏன் எடுத்தது. 

அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட பலரும் அங்கு சென்று போராட்டம் செய்யுங்கள். இங்கு சென்று போரட்டம் செய்யுங்கள் என்று கூறுகிறார். அன்று எனக்கு உதவி செய்த காயத்ரி ரகுராம், இன்று என்னுடன் இல்லை. குப்பை போல என்னை தூக்கி வீசிவிட்டார்கள். எனக்கு உடல்நிலை மோசமான சூழல் ஏற்பட்ட, ஒருமணிநேரத்திற்கு உள்ளாகவே டிஸ்சார்ச் செய்துள்ளனர். என்னை பற்றி அவதூறு பேசாதீர்கள் என்று மட்டுமே நான் கூறுகிறேன். சீமான் மற்றும் ரவுடி ஹரி மீது நடவடிக்கை எடுக்க வாக்குமூலம் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை " என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Vijayalatsumi Latest Press meet 28 July 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->