பள்ளி, கல்லூரி போகும் வழியில் ஒயின்ஷாப்! அதுக்குன்னு இப்படி நடக்குமா? - நடிகர் விஜய் விளக்கம்!! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய்யின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய், த்ரிஷா, மன்சூர் அலிகான் மற்றும் அந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வெற்றி விழாவில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால் அவருடைய ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் வெற்றி விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் விஜய் தனது திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது குட்டி ஸ்டோரி சொல்வார்.

ஆனால் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு காவல்துறையினர் பல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியதால் நடைபெறாமல் போனது. அதனை ஈடு கட்டும் வகையில் லியோ படத்தின் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த வெற்றி விழா மேடையில் பேசிய நடிகர் விஜய் "சினிமாவில் நல்லதையும் கெட்டதையும் பிரித்துக் காட்ட காட்சிகள் வைப்பது இயல்புதான். அது உங்களுக்கு நன்றாகவே தெரியும். பள்ளி கல்லூரி செல்லும் வழியில் ஒயின்ஷாப் உள்ளது. எல்லாரும் ஒரு ரவுண்டு போட்டா ஸ்கூலுக்கும், காலேஜுக்கும் போறாங்க? என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதற்கு காரணம் லியோ படத்தில் இடம்பெற்றிருந்த நான் ரெடி தான் பாடலில் போதைப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வரிகள் அமைக்கப்பட்டிருந்ததற்கு எதிராக புகார்கள் குவிந்ததால் மத்திய தணிக்கை குழு சில வார்த்தைகளை நீக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. இதன் காரணமாக லியோ படத்தின் நான் ரெடி பாடலில் சில வரிகள் நீக்கப்பட்டது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையிலேயே நடிகர் விஜய் ஒயின்ஷாப் குறித்து பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijay give clarification on na Ready song controversy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->