மூன்று மாதங்களாக உயரும் டெங்கு பாதிப்பு! யாருடைய அலட்சியம்? வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நிலவும் மாறுபட்ட தட்பவெப்ப நிலை காரணமாக பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கொசுவினால் உண்டாகும் டெங்கு பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது என சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் 113 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறை சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 14 நாட்களில் மட்டும் 230 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

இன்று ஒரே நாளில் மட்டும் தமிழக முழுவதும் 26 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி  கடந்த ஜனவரி மாதம் 866 பேரும், பிப்ரவரி மாதம் 641 பேரும், மார்ச் மாதம் 512 பேரும், ஏப்ரல் மாதம் 302 பெரும், மே மாதம் 271 பேரும், ஜூன் மாதம் 264 பேரும், ஜூலை மாதம்353 பேரும், ஆகஸ்ட் மாதம் 535 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் மாதத்தில் முதல் 14 நாட்களில் 230 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

வரும் நாட்களில் டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக கொசு ஒழிப்பு பணிகளை சுகாதாரத் துறை முழு வீச்சில் முன்னெடுத்துள்ளது. அதேபோன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் இதர மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு என்ன தனி வார்டுகள் அமைக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

அதேபோன்று நிலவேம்பு குடிநீர், பப்பாளி குடிநீர் உள்ளிட்டவை பொது இடத்தில் வைத்து பொது மக்களுக்கு வழங்க சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் கடந்த 3 மாதங்களாக தமிழகத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை தமிழக அரசும், சுகாதாரத் துறையும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டியதா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

According tn health dept report dengue increase in past 3months


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->