ஒரு வேளை நான் முத்தம் கொடுத்திருந்தால்..? கதறும் அபிராமியின் கணவர்: இரு உயிரை தொலைத்தபின் வந்த யோசனை.!
சென்னையில் தனது இரு குழந்தைகளையும் கொன்று விட்டு, தனது கணவரையும் கொல்ல முயற்சித்த அபிராமி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கணவர் உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் தனது இரு குழந்தைகளையும் கொன்று விட்டு, தனது கணவரையும் கொல்ல முயற்சித்த அபிராமி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கணவர் உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார்.
நானும் என் மனைவியும் கேட்ரிங் படித்த போது இருந்து காதலித்தோம். சென்னை வந்த பின்பும் ஒன்றாக பணியாற்றினோம்.
எங்கள் திருமணம் காதல் திருமணமாக இருந்த போதிலும் கூட, பெற்றோர்கள் சம்மதத்துடன் தான் நடந்தது. அபிராமியின் குடும்பத்தினர் தான் முன்னின்று நடத்தி வைத்தனர்.
கடந்த 8 வருடங்களாக எங்களுக்குள் எந்த வித சண்டை சச்சரவும் இல்லாமல், குடும்பம் நிம்மதியாக சென்று கொண்டிருந்தது.
நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளருக்கு எங்கள் குழந்தைகள் என்றால் அவ்வளவு பிரியம். எங்கள் வீட்டில் இருந்த நேரத்தை விட அவர்கள் வீட்டில் தான் மகள் அதிக நேரம் இருப்பாள். அந்த அளவுக்கு பாசமான சூழலில் எங்கள் குடும்பம் வசித்து வந்தது.
அபிராமி பாலில் விஷம் கலந்த அன்று நானும், என் மகனும் கலையில் எழுந்து விட்டோம். ஆனால் மகள் மட்டும் கண் விழிக்கவில்லை.
நானும் உறங்கி கொண்டிருக்கிறாள் என்று விட்டுவிட்டேன். நான் வேலைக்கு செல்லும் போதும் மகள் விழிக்கவில்லை. நான் வழக்கம் போல முத்தம் கொடுக்க அருகில் சென்ற பொழுது நன்றாக உறங்குகிறாள் தொந்தரவு செய்யாதீர்கள் என்று காயத்திரி கூறினாள்.
மகள் இறந்து கிடக்கிறாள் என்று தெரிந்து கொண்டே சிரித்தவாரே என்னை வழியனுப்பி விட்டு மகனை கொன்றுள்ளாள். ஒருவேளை நான் என் மகளுக்கு முத்தம் கொடுத்திருந்தால் என் மகனையாவது காப்பற்றி இருப்பேன்.
இறுதியில் எல்லாம் எதிர்மறையாக அமைந்து விட்டது என்று சோகமாக கூறி கதறி அழுதுள்ளார் அபிராமியின் கணவர்.
English Summary
abirami-husband-speaks-about-the-last-minutes-of-his-children