திருமணத்திற்கு வற்புறுத்திய பெற்றோர்கள்!! அதிர்ச்சியில் இளம்பெண் செய்த எதிர்பாராத காரியம்!!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு அருகே, சோழகங்கரையை சேர்ந்த ராமசாமி என்பவரது மகள் வினிதா(27) என்பவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வந்துள்ளார். 

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தஞ்சை அருகே உள்ள தனது சொந்த ஊருக்கு ஓய்வெடுக்க வந்துள்ளார். அவரை அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தி உள்ளனர். 

திருமணத்தில் வினிதாவிற்கு விருப்பமில்லாத காரணத்தால் மூன்று நாட்களுக்கு முன்னரே அவர் மாயமாகி விட்டார். எங்கு தேடியும் வினிதாவை கண்டுபிடிக்க இயலவில்லை. 

உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவர் திருமணத்தில் விருப்பமின்றி எங்காவது சென்றாரா?அல்லது எவரேனும் அவரை கடத்தி விட்டனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

English Summary

A girl missing in orathanaadu


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal