அதிமுகவிற்கு ஆதரவாக களத்தில் இறங்கும் முக்கிய நடிகர்!! குவியும் ஆதரவு!!  - Seithipunal
Seithipunal


அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் 10-ந்தேதி முதல் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

Image result for sarathkumar campaign seithipunal

திருப்பரங்குன்றத்தில் 10-ந்தேதியும், சூலூரில் 12-ந்தேதி, அரவக்குறிச்சியில் 15-ந்தேதியும்,  16, 17 ஆகிய தேதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். 

இதேபோல், அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவரான என்.ஆர்.தனபாலன் பிரசாரம் மேற்கொள்ள இருக்கின்றார். அதன்படி, ஓட்டப்பிடாரத்தில் 6-ந்தேதியும், திருப்பரங்குன்றத்தில் 9-ந்தேதியும், சூலூரில் 13-ந்தேதி, மீண்டும் 14-ந்தேதி ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சியில் 15-ந்தேதி அவர் பிரசாரம் செய்கிறார். 

Image result for ஏ.சி.சண்முகம் seithipunal

இன்று, சூலூரில் தேர்தல் ஆலோசனை கூட்டத்தை புதிய நீதிக்கட்சியின் நிறுவனரான ஏ.சி.சண்முகம் (சனிக்கிழமை) நடத்துகிறார். அதனை தொடர்ந்து 5-ந்தேதி அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட காட்டுமன்னூரில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். 

மேலும், அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பது தொடர்பாக திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளிலும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்த போவதாக அந்தக்கட்சி தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A famous actor support to admk


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->