மாரத்தானில் மாஸ் காட்டிய 88 வயது மூதாட்டி & 86 வயது முதியவர்.! குவியும் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


சிவகாசி மாரத்தான் நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு போட்டியாக 88 வயது பாட்டி ஒருவரும் 86 வயது முதியவர் ஒருவரும் ஓடிய சம்பவம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

சிவகாசி பகுதியில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர். மேலும், 5 பிரிவுகளில் இதற்கான போட்டிகள் நடைபெற்றன. 

போதையில்லா பசுமையான சிவகாசி என்ற முன்னெடுப்பில், நடைபெற்ற இந்த மாரத்தான் நிகழ்ச்சியில் வயது வித்தியாசம் இன்றி ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டனர். 5 பிரிவுகளில் 5.75 கிலோமீட்டர் தூரத்திற்கான பிரிவில் 88 வயது பாட்டி ஒருவரும் 86 வயது முதியவர் ஒருவரும் கலந்து கொண்டனர். 

இவர்கள் இருவரும் இளம் தலைமுறையைச் சேர்ந்த பலருக்கும் சவால் விடும் விதமாக 59 நிமிடம் 57 வினாடிகளில் ஓட்டமும், நடையுமாக சென்று எல்லைக்கோட்டை கடந்துள்ளனர். இந்த நிகழ்வை தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில் அவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

86 and 88 olders participate in Sivakasi marathon


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->