வெளுத்து வாங்கும் கனமழை.. சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகாலை கன மழை பெய்து வருகிறது.

அதன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும், ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, விமான நிலையத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, மதுரை, ஹைதராபாத், கர்னூல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8 flight service cancelled due to heavy rain


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->