7 மாதப் புதுமண வாழ்க்கை சிதைவு…! சினிமா பார்க்க அழைத்து செல்லாதததால் எடுத்த விபரீத முடிவு...! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே படியாண்டிபாளையத்தைச் சேர்ந்த ஜீவா சரக்கு ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அவர் சவுமியாவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வாழ்க்கை இனிதே தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளம் மணவாழ்க்கையில் திடீர் சோகச் சம்பவம் ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக புதுப்பெண் சவுமியா, கணவர் ஜீவாவிடம் “சினிமா பார்க்க அழைத்துச் செல்ல வேண்டும்” என்று வற்புறுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.ஆனால் வேலை பளுவை காரணம் காட்டி ஜீவா, மனைவியின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

இதனால் மனமுடைந்த சவுமியா, தனது தாயிடம் தொலைபேசியில் உருக்கமாக அழுது பேசியும் இருக்கிறார்.இதில் நேற்று காலை ஜீவா ஆட்டோவில் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த சவுமியா திடீரென வீட்டின் விட்டத்தில் கயிற்றால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

சில நேரம் கழித்து வீடு திரும்பிய ஜீவா மனைவியின் உடலை தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன்,அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இதுகுறித்து காங்கயம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இளம் மணவாழ்க்கை இத்தகைய சோக நிறைவிற்கு தள்ளப்பட்டிருப்பது அந்த பகுதி மக்களை கலங்கச் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7 months of newlywed life destroyed bizarre decision made because he didnt take her cinema


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->