கொள்ளிட ஆற்றில் மணல் கடத்திய 6 பேர் கைது..! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் அடுத்து கீழ கோவிந்தபுத்தூர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து  சிலர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சென்ற 6 மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். 

அந்த சோதனையில், அரசு அனுமதியின்றி மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்த நிலையில்,  மேலும் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த, மேல கோவிந்தபுத்தூர் பகுதிகளை சேர்ந்த அசோக் ராஜ் வயது 46, முருகேசன் வயது 41, வாசு வயது 29, அறிவழகன் வயது 27, பாக்யராஜ் வயது 38, குமார் வயது 44 , ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்."


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 people arrested for smuggling sand in Kolita river


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->