பாதை மாறும் கொடநாடு வழக்கு.. யார் அந்த 4 பேர்? பரபரக்கும் பி.ஆர்.எஸ் வளாகம்.!! - Seithipunal
Seithipunal


மறைந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் அரங்கேற்றப்பட்ட கொலை கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேருக்கு ஆஜராகுமாறு சமன் அனுப்பிய நிலையில் நேற்று மனோஜ் என்பவர் மட்டுமே ஆஜரானார்.

மீதமுள்ள 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனை அடுத்து கொடநாடு கொலை கொள்ளை வழக்கு ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு ரமேஷ் தேவன் ரவிக்குமார் அப்துல் காதர் உள்ளிட்ட நான்கு பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்‌. 

அதன்படி கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக கோவை பி.ஆர்.எஸ் வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஓட்டுனர் ரமேஷ் அப்துல் காதர் தேவன் ரவிக்குமார் ஆகியோர் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். இவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 person appear in cbcid office for Kodanadu case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->