#Breaking: 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முதல்வருக்கு செயலாளராக நியமனம்..!! - Seithipunal
Seithipunal


இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. தமிழகத்தின் முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களும் இன்று பதவியேற்றனர்.  

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே மணி, கூட்டணி கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பங்கேற்றார். மேலும், மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் அனைவரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். முதல்வராக பதவியேற்றதும் 5 கோப்புகள் கொண்ட முக்கிய அம்சங்களில் கையெழுத்திட்டார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நான்கு பேர் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உதய சந்திரன், உமாநாத், எம்.எஸ் சண்முகம் மற்றும் அனு ஜார்ஜ் ஆகியோர் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 IAS Officers for TN CM MK Stalin 7 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->