காவிரி ஆற்றில் 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரம்.. 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்.. ஒருவர் கைது.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம், மாயனூர் கதவனை அருகே ஆற்றில் மூழ்கிய ஒரு மாணவியை காப்பாற்ற முயன்ற போது, மூன்று மாணவிகள் நீரில் மூழ்கி, 4 மாணவிகளும் மூச்சு திணறி பலியாகி உள்ளனர்.

தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய நான்கு மாணவிகளின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருச்சியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி சேர்ந்த இந்த நான்கு மாணவிகளும் நேரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், "இந்த பகுதி பொதுமக்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதி. இதற்கான அறிவிப்பும் வைக்கப்பட்ட நிலையில், அதையும் மீறி மாணவிகள் இங்கு குளிக்க வந்ததால் இந்த துயரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு மாணவிகளையும் பாதுகாப்பாக அழைத்து செல்ல தவறிய காரணத்தால் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரான பொட்டுமணி, இடைநிலை ஆசிரியர் ஜெபசாய இப்ராஹிம் மற்றும் ஆசிரியர் திலகவதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், ஆற்றுக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் கைது செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 girl students died in Cauvery river 2 teachers suspended One arrested


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->