தென்காசி: குளத்தில் மூழ்கி 3ஆம் வகுப்பு மாணவன் பலி.! போலீசார் விசாரணை - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் குளத்தில் மூழ்கி 3ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் புளியங்குடி புதுமனை பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மகன் முகமது ரஷீத்(8) அப்பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து முகமது ரஷீத் விளையாடுவதற்கு வெளியே சென்றுள்ளான். ஆனால் இரவு வெகு நேரமாகியும் முகமது ரஷீத் வீட்டிற்கு வரவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அப்பகுதி முழுவதும் முகமது ரஷீத்தை தேடினர்.

ஆனால் சிறுவன் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால், பெற்றோர் இது குறித்து புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று புளியங்குடி பகுதிக்கு அருகே உள்ள குளத்தில் சடலம் ஊன்றும் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, குளத்தில் இறந்து கிடந்தது சிறுவன் முகமது ரஷீத் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுவன் விளையாடியபோது குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம்? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உண்டா? என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3rd class boy drowned in pond in thenkasi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->