திருப்பூரில் பரபரப்பு - பாஜக நிர்வாகி வீட்டில் சிக்கிய பணம் - அதிரடி காட்டிய ஐ.டி.!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே பரப்புமேடு பகுதியை சேர்ந்த பாஜக உள்ளாட்சி மேம்பாட்டுப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜவஹர் என்பவரது வீட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் இருப்பதாக வருமானவரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

அதன் படி ஜவஹரின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், வீட்டின் உள்பக்க அறையில் வைத்திருந்த 31 லட்சத்து 74 ஆயிரத்து 200 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்தப் பணம் ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. வெள்ளகோவில் பகுதிகளில் கோயில் திருப்பணிகள் செய்வதற்கு இந்த பணத்தை ஆற்றல் அசோக்குமார் கொடுத்து வைத்திருந்ததாக ஜவஹர் தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமானவரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணம் கோயில் கட்டுவதற்காக சேர்த்து வைக்கப்பட்ட பணம் என்றும் தேர்தலுக்கு தொடர்பு இல்லை என்றும் கடிதம் அளித்திருப்பதாகவும் ஜவகர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

31 lakhs money seized in tirupur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->