குறைவதை போல் குறைந்து ஒரேயடியாக உயர்ந்த தங்கத்தின் விலை.. இன்றைய விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று ஆபனணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4,790 ஆகவும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து, ரூ.38,320ஆகவும் விற்கப்படுகிறது.

அதேபோல், வெள்ளியின் விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 10 காசுகள் உயர்ந்து, ரூ.60.10 ஆகவும், கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.60,100க்கும் விற்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

30.08.2022 gold Price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->