போலி ஆதார் மூலம் ஊடுருவல்!! வெளிநாட்டவர் 3 பேர் சென்னையில் கைது.!! - Seithipunal
Seithipunal


படப்பையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் வங்கதேசத்தை சேர்ந்தவர் கைது.!!

சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். சென்னை அடுத்த பள்ளிக்கரணை படப்பை பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமே அதிகாரிகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட அமைப்புடன் வருகையில் இருக்கும் நபர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை அடுத்த படப்பையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த சபாபுதீன் என்பவரை கைது செய்துள்ளனர். அவர் போலி ஆதார் அட்டை தயாரித்து இந்தியாவில் ஊடுருவி வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் போன்று போலி ஆதார் அட்டை தயாரித்து வைத்திருந்ததை என்னையா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதேபோன்று சென்னை அடுத்த மறைமலைநகர் பகுதியில் உள்ள ஜூஸ் கடையில் வேலை செய்து வந்த முன்னா மற்றும் அவருடன் தங்கி இருந்த மியான் ஆகியோரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் போலி ஆதார் அட்டை மூலம் தமிழ்நாட்டில் பணியாற்றிக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரையும் கைது செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 foreigners arrested in Chennai for entering India with fake Aadhaar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->