ஊட்டியில் 2-வது மலர்க்கண்காட்சி தொடக்கம்!...பூத்து குலுங்கும் 4.5 லட்சம் மலர் செடிகள்! - Seithipunal
Seithipunal


கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். மேலும் தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெறும் இந்த மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ரோஜா மலர்களைக் கொண்டு யானை, புறா, புலி உள்ளிட்ட விலங்குகளின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்த நிலையில் ஊட்டியில் கோடைக்கு அடுத்ததாக வரும் இரண்டாவது சீசன் சிறப்பு மலர்க்கண்காட்சியானது தற்போது அரசு தாவரவியல் பூங்காவில்  தொடங்கி உள்ளது.

தற்போது 2-வது சீசன் தொடங்கி உள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகை வர தொடங்கியுள்ளனர். மேலும் தாவரவியல் பூங்காவில் உள்ள அலங்கார மேடைகளில் 70 வகையான மலர் ரகங்கள் 10,000 தொட்டிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த மலர் கண்காட்சி ஒரு மாதம் நடைபெற உள்ள நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்கா முழுவதும் 4.5 லட்சம் மலர் செடிகள் பூத்து குலுங்குகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2nd flower show begins in ooty 4.5 lakh flower plants in full bloom


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->